ஏக்கங்கள்..கவிஞர் தயாநிதி

இருப்பவன்
இரங்க மறுக்கின்றான்
இல்லாதவன்
இனிமை இழக்கின்றான்..

ஆடம்பர
விளம்பரங்கள்
ஆடை அணிகலன்கள்
ஆட்டிப் படைக்குது,,,

உயிரில்லா
பொம்மைகள் கூட
நாளுக்கொரு ஆடை
மற்றி மகிழுது….

உயிருள்ள
பல வீடுகளில்
பிறந்த மேனிகள்
காட்சி பொம்மைகளாய்..

ஆனி ஆடி
வந்து விட்டாலே
தாயக தரிசனம்
அள்ளுப்படுகின்றோம்.

மனமுண்டால்
இடமுண்டு.இவர்களை
எண்ணி ஏதாவது
கொண்டு செல்லுங்கள்..

தாகத்தில்
இருப்பவனுக்கு
தண்ணீர் கொடு
இடமில்லாதவனுக்கு
இருக்க இடம் கொடு
ஆடை இல்லாதவனுக்கு
உடுக்கக் கொடு. இது

ஆக்கம் கவிஞர்தயாநிதி