காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு !கவிதை சுதாகரன் சுதர்சன்

 

தன் உறவொன்று பிரிந்த
வலியில் துடித்து போகிறது
வாய் பேசா ஜீவனும்
ஆறு அறிவு இருந்தும்
மரத்து போகிறது
மனித இனம்
காக்கைக்கு தன் குஞ்சு
பொன் குஞ்சாம்
ஆனால் மனிதனே
மனிதனை கொன்று
குவிப்பதேனோ
வாய் பேசினால் வலி
மௌனமாக இருந்தால் வலி
வாய் விட்டழுதால் வலி
எப்படித்தான் வாழ்வது
பூமியில்

எல்லாம் இருந்தும்
அள்ளி உண்ண கை கொடுக்காத
கடவுள் போலதான்
உறவுகள் என்ற மாயையும்
பெற்றவள் உறவு உண்மையாம்
அதுவும் சில நேரம்
பொய்த்துத்தான் போகிறது

மரணத்தை தேடிச்சென்றால்
அது கூட தூர விரட்டி
விட்டுத்தான்
வேடிக்கை பார்க்கிறது
இயலாமை என எண்ணினாலும்
முயற்சி எடு எங்கிறது
மனச்சாட்சி
இருக்கும் வரை
இருந்து விட்டுப்போகிறேன்
ஒரு ஜடப்பொருளாக.

ஆக்கம் சுதாகரன்  சுதர்சன்

Merken