இயற்கையே ஏன் இந்த சீற்றம்!கவிதை கவிக்குயில் சிவரமணி

 

அரசன் அன்று கொல்வான்
தெய்வம் நின்று கொல்லும்
சரி ……??
எய்தவன் இருக்க அம்பை
நாம நோவதேன்

இயற்கை அன்னையே
பொறுத்தது போதுமென
பொங்கியெழுந்தாயோ
காவு கொண்ட உயிர்களால்
சரி பன்னநினைக்கிறாயோ

எம் மண்ணில் ஓடியது இரத்த ஆறு
உப்பு நீரிலும் கலந்தததினால்
இன்றும் செந்நீரே எங்கும்
அது எம் விதி !

இன்று மாறிய விதி என்ன ?
மானிடர் மீது வஞ்சம் என்ன ?
பாவம் அறியா பலருண்டே!

கருவிலிருக்கும் சிசு முதல்
தொட்டில் ஆடும் குழந்தை வரை
உன் கோபத்திற்கு ஆளாவதேனோ

சிறுக சிறுக சேர்த்த சொத்தும்
சிதைந்து போவதை காணீரோ

இதைவிட கொடுமை அன்று
அதைப்பார்த்தும்
மௌனம் உலகம்

இன்று பெருமை கொள்கிறேன் தாயே
ஊடகங்கள் உலர் உணவு சேகரிப்பு
உதவும் கரங்கள் ஆயிரம் அணிவகுப்பு

நீயும் கொஞ்சம் பிடிவாதக்காரி தான்
கட்டாய பாடமாக்குகிறாய்
மனிதத்தை

நீயும் கொஞ்சம் கோபக்காரி தான்
எங்கங்கு உன் தாண்டவமோ
ஆடித்தான் களிக்கின்றாய்

இனவாதம் இல்லை
மதவாதம் இல்லை
மனிதர்காய் மனம் அழுகிறது

ஆடிய காற்றே அடங்கு
சீறிய புயலே உள்வாங்கு
மழையே கொஞ்சம் நில்லு

உனக்கு இன்னும் வேலையுண்டு
உறறங்கி உறங்கி எழுகிறாயா
அத்திபூத்தாப்போல அனர்த்தம்

கருணைக்குகொஞ்சம் நாம் வழிகொடுப்போம்
கலங்கும் உள்ளங்களுக்கு கை கொடுப்போம்
இயற்கையே ஏன் இந்த சீற்றம்
சீறவேண்டி காம் தனில் அமைதி காத்து விட்டு

ஆக்கம் கவிக்குயில் சிவரமணி