தூரிகையில் பிறந்த பெண்ணழகி, இந்த
காரிகையோ! ஆதித்தூய குடிமண்ணழகி,
கேளிக்கையான குறும்புத்தமிழ் சொல்லழகி
ஜரிகைப்பட்டுகள் இல்லாமலே ஜொலிக்கும்
தாரிகை இவள் என்றாலே மிகை இல்லை.
வாரிகை படாத கேசத்தவளாகினும் ,அள்ளி
வாரியிறைக்கும் கொள்ளையழகுத் தேசத்தவள்
பாசியைப் பவளமாய் பலவர்ண மாலையாக்கி,
பாரியைமிஞ்சிய வாள்ளலானாள் வடிஅழகிலே.
ஆக்கம் குறத்திநேசன்