எப்படி…?கவிதை கவிஞர் தயாநிதி

 

அகரம்
அழுத்தி
அரிசியில்
விரல் பதித்த
வேளையிலோ..

சிலேற்றில்
பென்சில்
பிடித்து
கிறுக்கிய
வேளையிலோ…

இக் கிறுக்கன்
இப்படித் தினம்
கிறுக்கிக் கொண்டே
இருப்பான் என
எண்ணம்
இருந்திருக்குமா…?

எஞ்சக்
கூடியதும்
எழுதி
மிஞ்சக்
கூடியதும்
என்றென்றும்
எழுத்துக்களே….

பொக்கிசமாக
பெரும் புதையலாக
பெற்ற எழுத்துக்களே
பெரும் பேறாக
எமை நிறுத்தியது.

விஞ்ஞான உலகில்
அச்சேறி ஆவாணமாகி
தட்டச்சில் பதிவாகி
இன்று நவீன கணணி
யுகத்திலும் ஓங்கிப்
பதிவாகி முகநூலாகி
முத்தமிழுக்கு தளமாகி
பலரை எழுத்தாளராக்கிட
புடம் போடும் தமிழே
ஓயாது எழுதுவோம்…

ஆக்கம் கவிஞர்தயாநிதி