சின்னஞ் சிறு வயதில்
சேர்ந்து நாம் இருந்தோம்
சிந்தையில் தினம் உனை வைத்து
பூசைகள் பல செய்தேன்
உன் வார்த்தைகளால்
தினம் வியப்புற்றிருந்தேன்
உன் அன்பெனும் ஆற்றில்
அலைகளாய் சேர்ந்தே இருந்தேன்
உன் விழிகளில் தோன்றிய மின்னல்களே
என் விழிகளைப் பறித்து
உன் விழிக்குள் புகுத்தியது
உன் வழிக்குள் என் விழியை
பதித்து விட்டதால்
உறக்கமெல்லாம் உன் விழியால்
நான் பெற்றேன்
மழை காலத்து நிலவு போல்
மறைந்தே இருந்தேன் உன் உயிரில்
புரியாதோ உனக்கு இப்பூவின் மணம்
புன்னகை விரியாதோ பூப்போல்
புழுவாய்த் துடித்த நாள் அன்று – புரிந்தும்
புயலால் நனைந்த நாள் இன்று
துடிக்குது துயருற்ற ஓர் உறவு
சொர்க்கங்களையெல்லாம் சொந்தமாக்கியவன் அன்று
சோகங்களையா சொந்தமாக்க வேண்டும் இன்று
சொல் மனமே சொல்
நெஞ்சம் இனிக்கிறது அன்றைய
நினைவுகளையெண்ணி
பொய்யாகிப் போகாதோ
பிரிவு என்ற பெருந்தோகை!
கவியாக்கம்: கவிஞர் ஆனைக்கோட்டை தமிழ்நேசன்