நடை
உடை
நவ நாகரீக
மோகம்..
ஆடை
வடிவங்களும்
பண்பாடுகளும்
இனத்தின்
அடையாளங்களே.
அழிவுகளின்
ஆரம்பம்
ஆடையில்
மொழியில்.
கோடையில்
கோர வெய்யிலில்
வெள்ளைகள்
அணிந்தனர்…
அந்தரங்கம்
அறியும்
அவசியம்
இல்லாத
பாலுணர்வு…
பழுதான
பார்வைகளின்
உரிமைக்காரர்
கடிவாளம்
அறுத்த கண்கள்…
ஏழைகள்
அணிந்தால்
ஏளனம்..
வேண்டாமே
ஏண்டாப்பு…
எதுக்கு இந்த
பொல்லாப்பு….
ஆக்கம் கவிஞர்தயாநிதி