வேற்றுமை வேண்டாம் .
இருட்டை தின்றது
காக்கை
அதனால்
கருப்பாய் ஆனது
யாக்கை
என
குருட்டுக் கதைகளைப்
பேசும்
முரட்டு மனிதரால்
சமூகம்
முரண்டு பிடித்தே
நாளும்
முரண்பட்டே தினம்
மாளும்.
இரண்டு கைகள்
இணைந்தால்
இன்னல் பலவும்
விலகும்
குரங்குச் சண்டை
வேண்டாம்
குதர்க்க வாதமும்
வேண்டாம்
பிரண்டு உருள்வதனாலே
பொது எதிரி
வெல்வான் மேலே
சிரங்கை பிய்த்து
மாளும்
விலங்காய் நீயும்
வீழும்
நிலையை உணர்ந்து
மீள்வாய்
இனத்தால் இணைந்து
வாழ்வாய்.
கவிஞர். ஏரூர் கே. நெளஷாத்