28.11.19 அன்று இடம்பெற்ற கதைமாலை.

பிறந்து வளரும் நாட்டில் தாய்மொழியை உணரவேண்டுமெனில் முதலில் “விருப்பை”
ஏற்படுத்தவேண்டியுள்ளது.

காலம்காலமாக பிள்ளைகளைக் கவர்ந்து வருவது “கதை”

எந்தமொழிக் கதை?

முதலில் வாழ்வியல் மொழிக்கதை
பிறகு தாய்மொழிக்கதை
இறுதியாக தாய்மொழிக்கதையை வாழ்வியல் மொழியில் மொழிபெயர்த்துச் சொல்வது.

மொழி என்பது கடினமாக உணரப்படாத பட்சத்தில் எந்தமொழிகுறித்த உயர்வும் ,தாழ்வும் மனதில் தோன்ற வாய்ப்பில்லை.

மூன்றாவது வருடமாகத் பொது நூலகத்தில் தொடரும் கதைமாலை இது.

மாதம் ஒருமுறை
மாலை ஒருமணிநேரம்
சுடச்சுட கதை.