காற்றுவெளியிசை இறுவெட்டு வெளியீடடின் ஒழுங்கமைப்பு சம்பந்தமாக இன்று ஜெர்மனி டோர்ட்முண்ட் நகரில் ஒன்று கூட ப்பட்டது ,11 30 மணியளவில் அகவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டு இன் நிகழ்வை மக்களிடம் சிறப்பாக கொண்டு செல்வது முதல் இசை வெளியீடு போன்றவற்றின் ஒழுங்கமைப்புகள் பற்றியும் கலைஞர்கள், பார்வையாளர்களை அழைப்பது பற்றி, எப்படியாக சிறப்பாக குறைந்த நேரத்துக்குள் இன் நிகழ்வை நடத்தி முடிக்க முடியும் என்பது பற்றியும், நேர அட்டவணைகளை சரியாக போட்டதோடு, இந்த நிகழ்வுகளின் சிறப்புக்கள் எப்படி இருந்தால் நல்லது அது எப்படி மக்களை போய்ச் சொல்ல கூடிய சந்தர்ப்பங்கள் இருக்கின்றது என்றும் ,
இசையமைபாபாளர் சேகரும்(ஹொலண்ட்) தனித்துவம் ஆளுமை கொண்டதுமட்டுமல்ல இந்தபாடல்கள் எமது பலகலைஞர்கள் பல்வேறு நாடுகளில் இருந்து எழுதிய து பாடகர்கள் பல்வேறு நாடுகளில் இருந்து பாடிய பாடல்கள் எமது கலைஞர்களின் தனித்துவமிக்க படைப்பு என்பதால் இந்தப் படைப்பை
நல்ல முறையில் மக்கள் கலைஞர்கள் உள்வாங்குவார்கள் என்ற கருத்துடன்
இதில் ஒலி ஒளி அமைப்பு போன்றவற்றின் விடயங்களும் மண்டப ஒருங்கிணைப்புகள் மேடையில் இடம்பெற உள்ள இசை நிகழ்ச்சி நடன நிகழ்வுகள் என இன்னும் பல விடையங்கள் கலந்துரையாடப்பட்டது,
இந்த இசைப்பேழையை கலைஞர்களிடம், மக்களிடம் எப்படி கொண்டு சேர்ப்பது என்பது பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது,
இந்த கலந்துரையாடலில் மூத்த ஊடகவியலாளர் திரு முல்லை மோகன் அவர்களும்,
தொலைபேசிவழியே நிகழ்வு மண்டபத்தை பெற்றுத்தருகின்ற ஆசிரியர் பொதுத் தொண்டர் பொ.ஸ்ரீஐீவகன் அவர்கள்,
ஊடகவியலாளர் இசையமைப்பாளர் எஸ் தேவராசா அவர்கள் ,
வெளியாக இருக்கும் காற்று வெளியே இசைப்பேழையின் இசையமைப்பாளர் சேகரும்(ஹொலண்ட்)
பாடலாசிரியர் ஒருங்கிணைப்பாளர் கவிமகன் அவர்கள்
தொலைபேசிவழியே மூத்த தாளவாத்தியக்கலைஞர் தேவகுருபரன் என இந்த ஒன்று கூட ல் இனிதே 2.30 மணிக்கு நிறைவுகண்டது