11.09.20அன்று இலங்கையின் உயர் விருதான „நாடகக் கீர்த்தி“விருது பெற்ற அருட் கலாநிதி நீ.மரிய சேவியர் அடிகளார் அவர்களை பாரிஸ் பாலம் படைப்பகமும் உங்களுடன் இணைந்து வாழ்த்தி மகிழ்கிறது.விருதுகள் எப்போதுமே தகுதியாவனர்களுக்கு வழங்கப்படும் போது அதை பெறுகின்றவர்கள் மட்டுமல்ல அந்த விருதுகளும் அதனால் கௌரவம் பெறுகின்றன.இத்தகைய கௌரவத்தை 11.09.20அன்று அரச உயர் விருதுகளில் ஒன்றான „நாடகக்கீர்த்தி“விருது பெற்றுள்ளது.திருமறைக்கலாமன்றம் என்ற கலை நிறுவனத்தை நிறுவி கடந்த 55ஆண்டுகளுக்கு மேலாக இடையறாத கலைப்பயணத்தில் பல்வேறுபட்ட சாதனைகளை படைத்து இன்றைய நாட்களில் உடல் தளர்வுற்று,ஓய்வு நிலையில் இருக்கின்ற அருட்கலாநிதி நீ.மரியசேவியர் அடிகளார் 11.09.20 அன்று கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் இடம்பெற்ற அரச நாடக விழாவின் விருது வழங்கும் நிகழ்வில் நாடகக் கீர்த்தி என்னும் முதுகலைஞர் அரச உயர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.இந்த விருதினை நீ.மரிய சேவியர் அடிகளார் நேரில் சென்று பெறமுடியாத நிலையில் திருமறைக்கலாமன்றத்தின் உதவி நிர்வாக இயக்குநர் அருள்பணி அ.அன்ரன் ஸ்ரிபன் அடிகளார் பெற்றுக் கொண்டார்.புத்தசாசன,சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கலாசார அலுவல்கள் திணைக்களம், இலங்கை கலைக்கழகம், அரச நாடக ஆலோசனைக்குழு ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம் பெற்றிருந்தது..இந்த நிகழ்வில் நாடகக் கீர்த்தி விருதினை பெற்று கொண்ட ஏனைய மூவரும் சகோதர மொழிக் கலைஞர்கள் ஆவர்.இவ்வேளையில் நாடகக் கீர்த்தி விருது பெற்ற அருட் கலாநிதி நீ.மரிய சேவியர் அடிகளார் அவர்களை பாரிஸ் பாலம் படைப்பகமும் வாழ் தத்துவதில் பேரானந்தம் அடைகிறது.