பஞ்சம் விளையுமொரு
தாப வனாந்தரத்தில்
பாவ மானிடர் தம்
வாழ்வியல் தொலைகிறது
உச்சம் தொட்டிருக்கும்
அசுர விலையேற்றம்
பட்டினிக் கோலத்தையே
அலகுகளால் வரைகிறது
அன்றாடத் தேவையெல்லாம்
திண்டாட்டம் நிறைந்திருக்க
உயிர் வாழ்தல் எனும் சொல்லே
பெருவேள்வி புரிகிறது
கொழுந்து விட்டெரியும்
பொருட்களின் விலைத்தீயில்
அன்றாட உழைப்பாளி
வெந்து தினம் துடிக்கின்றான்
உய்ய வழியின்றி
உருக்குலையும் உடலுக்கு
வாய்க்கரிசி கூட இன்று
எட்டாத்தூரம் போன நிலை..
- வேலணையூர் ரஜிந்தன்.