இசையென்னும் என் இனிய பயணத்தில்பட்டறித பல்வகை இடர்கள்,தடைகள் தாண்டிய இடையறாத உழைப்பின் பயனாகக் கிடைக்கப் பெற்ற என்கௌரவ விருதுகளின் வரிசையில்மென்மேலும் சிறப்பு வாய்ந்த வகையாக மீண்டுமோர் „சாதனையாளர் விருது“ஒன்றைப் பெற்றதில் நான் மட்டிலா மகிழ்ச்சி கொள்கிறேன்.யாழ்.நாவற்குழி வெண்ணையன்பதி ஸ்ரீ காளியம்மன் சமேத உக்கிர வீரபத்திரர் ஆலயத்தின் மீது பாடப்பட்டு 28/06/2020 ஆம் நாள் வெளியீடு செய்யப்பட்ட பக்திப் பாமாலை இறுவட்டு உருவாக்கத்தில் பங்காற்றிய வகையில் தொடர்புபட்ட அனைத்துக் கலைஞர்களும் குறித்த ஆலயத்தின் பரிபாலன சபையினராலும், துறைசார்ந்த நிபுணத்துவக் கலைஞர்களாலும் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது!.இந்நிகழ்வின் சிறப்பாக எனது இசைப்பயண வளர்ச்சியின் மற்றுமோர் அம்சமாக குறித்த குழுமத்தினரால் „ஈழத்தின் இசைத்தென்றல்“ எனும் மகுடத்தைத் தாங்கிய விருது கிடைக்கப்பெற்ற மகிழ்வை நன்றியுணர்வுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.இவ்விருது வழங்கல் நிகழ்வைச் சிறப்பித்த பெருந்தகைகளானபரிபாலன சபைத் தலைவர்- திரு.இ.ஜெயக்குமார்.பிரதம விருந்தினர்ஈழக் கவிஞர்-திரு.கு.வீரா.சிறப்பு விருந்தினரானதேசகீர்த்தி திரு.வை.மோகனதாஸ்.(ஆணையாளர்,இலங்கை இந்துமத தொண்டர்சபை.)ஆகியோருடன் இணைந்து இந்நிகழ்வுக்கு வலுச்சேர்த்த அத்தனை உறவுகளையும்சிரம்தாழ்த்தி கைகூப்பி வணங்கி நிற்கிறேன்.இதுவரை நாளைய எனது அயராத உழைப்பிற்கு காத்திருந்து கிடைத்த பெரும் சன்மானச் சின்னமாக இவ்விருதினை என் கைகளில் தாங்கி நிற்கின்றேன்.எனது இசைப்பயணத்திற்கு அடியெடுத்துக் கொடுத்து என்னை ஆளாக்கிய என் பெற்றோரையும், இடைவிடாது தொடர்ந்த என் இசைப்பாதையில் இடர்தகர்த்து இன்னொளி கொடுத்துவரும் என் (மனைவி)இல்லாளையும்,இசையென்னும் இன்பக்கடலில் நான் மூழ்கி எடுத்த ஒவ்வொரு முத்துக்களுக்கும் மூலவேர்களாக அன்றுதொட்டு இன்றுவரை உடனிணைந்து பயணிக்கும்பாடலாசிரியர்கள்,பக்கவாத்தியக் கலைஞர்கள்,இணைஇசைக் கலைஞர்கள், பாடகர்கள், சக ஒலிப்பதிவாளர்கள் அனைவரையும் இச்சந்தர்ப்பத்தில்என் விருதுக்கு வித்திட்டவர்களாக்கி வணங்குகிறேன்.என்னூடான என் கலையகத்தின் ஒவ்வொரு படைப்புகளுக்கும் முழுமையான ஆதரவும்,ஆக்கபூர்வமான கருத்துக்களையும் வழங்கிவரும் என் இசை ரசிக உறவுகளான உங்கள் அனைவரதும் ஆசியுடன்என் பயணத்தை இனிதே தொடர்கிறேன்.நன்றி.அன்புடன்,P.S-விமல்.