கால தேவன் கையளித்த கன்னியவள்
காதல் மையை கண்ணில் வைத்த கள்ளியிவள்
மாலை நேரத்து மஞ்சள் வெயில்
மனதில் வைத்தாள் கொள்ளியிவள்
என் விழியை கர்ப்பமாக்கிய விந்தைக்காரி ..
செம்மொழியும் விரும்பும் சொந்தகாரி.
கை பிடிக்கேன் விரும்பி உன்னைத் தாடி..
கண்மணியில் மலர்ந்த இன்பத் தேனீ…
இதழ்கள் இரண்டில் இன்ப ரசம்
இதயம் இணைய இன்பம் வரும்
இன்பம் ஒன்றே உலகில் சுகம்
இதனைக் கொண்டே இயற்கை வலம்
ஆடை சூடிய அழகுப் பூ மலர்
வாழைப்பூ மூடிய வாசப் பூவுடல்
ஆசை கூடிட வாடாப் பூவிவள்
புதுப் பாஷை பேசிட கூசும் கண்மலர்
இருவிழி ஈர்க்கும் இவளது மேனி
ரசித்திட இனிக்குமோர் சிம்பொனி
ஒருவகைப் பசிக்கு இவளொரு மாங்கனி
ஒரு வரம் கிடைத்தால் தாங்கு நீ..
ஆக்கம் கவித்தென்றல் ஏரூர்