இரு தசாப்தங்களைத்தாண்டி வெற்றியோடு” வாழ்க தமிழ்” விழா டென்மார்க்கில் சிறப்பாக நேற்றையதினம் நிறைவேறியது. தமிழ்மொழிக்கல்விக்கும் அதன் பண்பாட்டு விழுமியங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து சேவையடிப்படையில் இயங்கும் மாலதி தமிழ்க்கலைக்கூடம் மதிப்பளிக்கும் நிகழ்வாக நிர்வாகிகள் ஆசிரியர்கள் மாணவர்களைக் கௌரவித்துப் பாராட்டுப் பதக்கங்கள் விருதுகள் சான்றிதழ்களையும் வழங்கியது……
நிகழ்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்
கலந்துகொண்டனர். மேற்படி நிகழ்
வில் 109 மாணவர்கள் 12ம் தரத்தை தமிழில் முடித்தமைக்கான சான்றிதழைப் பெற்றுக்கொண்டனர். இதில் வியக்கத்தக்க விடயம் என்னவென்றால் இவர்கள் அனைவரும் பல்கலைக்கழக மாணவர்கள் குறிப்பாக 14 பேர் மருத்துவர்களாகவும்,17பேர் பொறியியல் துறையிலும் ஏராளமானோர்
பொருளியல் அரசியல் சட்டத்துறையிலும் தங்களது மேற்படிப்பை தொடரும் இவர்கள் பல கஷ்டங்களுக்கு மத்தியிலும் தழிழைக் கற்ற எங்கள் தமிழ்க்குழந்தைகளைப் பார்க்கின்ற போது மிகவும் பரவசமாகவே இருந்தது. என் அறிவுக்கு எட்டியவரையில் 15 வருடங்களாக கற்பித்தல் செயற்பாட்டை செய்து வருகின்றேன்.இந்தச் சேவையை பாராட்டி ஒவ்வொரு ஆசிரியரையும் அழைத்துப் பாராட்டுப் பரிசை வழங்கி கௌரவித்தனர்.அத்தோடு பல உறவுகளைக் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.நிகழ்வில் தோழி நக்கீரன் மகளையும் சந்தித்தேன்.
மறக்கமுடியாத மகிழ்வான தருணம் ❤️?சுபாரஞ்சன்