இயேசு பிரான்
சிலுவையில் அறையப்பட்டு
மூன்றாம் நாள் விழித்தெழுந்த
பெருநாளை உலகெங்கும்
விடுமுறையாகவும்
கத்தோலிக்கப் பண்டிகையாகவும்
பக்தியுடனும் மகிழ்வுடனும்
கொண்டாடும் உயிர்த்தஞாயிறு
நன்னாளில்……
வெந்த புண்ணில்
வேல் பாய்ச்சினாற் போல்
நொந்த மக்களை நோகடிக்க
ஆண்டவனின் சந்நிதிதான்
இலக்காயிற்றோ??
ஆத்மதிருப்திக்காய் ஆறுதல்
தேடி ஆலயங்களில்
வழிபட்ட வேளைதனில்
பூவும் பிஞ்சும்
வேரும் விழுதுகளாய்
துடிதுடித்து
குருதி வெள்ளத்தில்
மடிந்து போன
அனைத்து உறவுகளுக்கும்
ஆழ்ந்த அனுதாபங்கள்!!??