கணமது ஒவ்வொன்றும் உன்னது
….கணிமுகஎழில் எண்ணியே கடக்கின்றன.
மனமது ஒன்றான பின்னே உன்னது
…..மன எண்ணமும் அதுவேஎன அறிந்தேன்.
பிணமது ஆனபோதும் எம்மது
,,,,பிரியங்களை பிரிக்க முடியாது பெண்ணே
சனமது புத்திஎன சொல்லும் சொல்லது,
….சற்ரேனும் நம்பினைப்பை மாற்றாது.
குணமது வேறாகி இருந்தும் நம்மது
….காதலேனும் வேதத்தால் ஒன்றானோம்.
பணமது வந்துபோகும் பெண்ணே, நம்மது
….பாசமெனும் விலையில்லா செல்வம்போதும்
வனமது வாழும் வறுமையான வாழ்வது
…வந்தபோதும் வஞ்சியுன் வாசம் போதும்.
ஆக்கம் வஞ்சிநேசன்