தமிழ்க்கல்விக்கழகம் பிராங்பேர்ட் தமிழாலயத்தில் இன்று சிறப்பாக நடைபெற்ற சரஸ்வதிபூசைக்கு வகுப்பறைகளிலிருந்து மாணவர்கள் அனைவரும் ஆசிரியர்களால் பிரார்த்தனை மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டு மங்கல விளக்கேற்றல்> சரஸ்வதி பூசை> சரஸ்வதிபூசை பற்றிய மாணவர்கள் உரையுடன்> வாய்ப்பாட்டு வயலின் சிறுவர் நடன நிகழ்வுகளுடன் ஆசிரியர் திரு இராசரத்தினம் மழலைகளுக்கு அகரம் தொடக்கி உயிர் மெய் எழுத்துக்கள் கற்று கொடுத்ததோடு விளை நெல்அரிசியில் மழலையர்களின் பிஞ்சு விரல் பிடித்து முதற் கல்வியை எழுதி ஆரம்பித்து வைத்தார். அத்துடன் மாணவர்களுக்கு சுரத்தட்டு நரம்பிசை நடனம் போன்ற ஆரம்ப நிகழ்வுகளும் நடைபெற்றது. இந் நிகழ்வில் பெற்றோர்கள் நலன்விரும்பிகள் ஆசிரியர் நிர்வாகிகளுடன் சிறப்பு விருந்தினர்களாக இலங்கையில் இருந்து வருகை தந்திருந்த கொழும்பு விவேகானந்தா கல்லூரி உபஅதிபர் திருமதி சந்திரிகா இரவிச்சந்திரன் அவர்களும் இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த வைரம் கருணாநிதி அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இலங்கையில் இருந்து வருகை தந்திருந்த கொழும்பு விவேகானந்தா கல்லூரி உபஅதிபர் திருமதி சந்திரிகா இரவிச்சந்திரன் தமிழ்மொழி கல்வி பற்றிய சிறப்பு சொற்பொழிவும் இடம்பெற்றது.