யேர்மனி தமிழ்க் கல்விச் சேவையுடன் இணைந்து சேவையாற்றும், டோட்முண்ட் வள்ளுவர் தமிழ்ப் பாடசாலை வருடாந்தம் நடத்தும் வள்ளுவர் விழா / திருக்குறள் மனனப்போட்டிகள் 16.11.2019 அன்று நடைபெற்றது,
ஆண்டுதோறும் ஆரம்பத்தொகுப்பாளராக ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த மதுரக்குரலோன் முல்லைமோன் ஆரம்ப அறிவிப்பை தொடக்கி வைக்க,
அதன் பின் (யேர்மனி தமிழ்க் கல்விச் சேவையின் உறுப்பினர்கள் )
இளம் அறிவிப்பாளர்கள்
திருமதி. ஆரபி ராகவன் சிறீஜீவகன்
செல்வி. ஆரணி கனகசுந்தரம்
செல்வி. அபிராமி மகேந்திரன்
நிகழ்வுகளைத்தொகுத்து வழங்க டோட்முண்ட் வள்ளுவர் தமிழ்ப் பாடசாலையின் (16.11.2019 சனிக்கிழமை )வள்ளுவர்விழாவில் திருக்குறள் மனனப்போட்டிகள் இவ்வருடம் பல போட்டியாளர்களை உள்வாங்கி சிறப்பான திருக்குறள், கலைநிகழ்வுகளுடன் இனிதே அமைந்திருந்ததுதொடக்கி
இன் நிகழ்வுகள் காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகி பல பிரிவுகளாக போட்டியாளர்களின் வயது எல்லை பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டதோடு இடையிடையே கலைகழ்வுகளும் என இரவு 6.30 வரை பார்வையாளர்களின் உற்சாக கைதட்டல்களுடன் இடம்பெற்றிருந்தது
இதில் கலங்து கொண்ட பிள்ளைகளின் பெற்றேர்கள் தங்கள் தங்கள் பிள்ளைகளின் போட்டி முடிவுகளை எதிர்பார்த்து மிகவும் ஆவலாகயிருந்தனர்.
இன்நிகழ்வில் பல தூர நகரங்களில் இருந்து போட்டியாளர்கள் பங்கு பற்றியிருந்தமை சிறப்பே.(படபோன், முன்சர், என்லிங்லோ, காகன், கொலண்ட், காஸ்ரெப்றவுசல், பேர்க்காமன் , எசன், டோட்முண்ட், சோஸ்ற், விக்கடை, கம், ஒபகவுசன்)
பிள்ளைகளின் உச்சரிப்பு, குரல்வளம் , சைகை, கலாச்சார உடை, அனைத்தும் வியப்பில் ஆழ்த்தியது, பங்கு பற்றிய முதல் மூன்று மாணவர்களுக்கு கேடயமும், பங்குபற்றிய அனைத்து மாணவர்களுக்கும் பதக்கமும் அணிவித்து கௌரவப்படுத்தியமை சிறப்பாகும்
இவ் விழாவில் STS தமிழ் தொலைக்காட்சி நிர்வாகி, இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் ஊடகவியலாளர், எஸ் தேவராசா
ETR வானொலி நிர்வாகி, மேடைப்போச்சாளர், ஊடகவியலாளர்,த .இரவிந்திரன்
மேடைப்போச்சாளர் எழுத்தாளர் வி.சபேசன் ஆகியோர் வாழ்த்துரைவழங்கினர்
திருமதி. சுபத்திராதேவி விவேகானந்தன் சிறப்புரை ஆற்றினார்
மருதனாமடம் இராமநாதன் கல்லூரியில் கல்வி கற்று, இலண்டன் பீ.ஏ. பட்டப்படிப்பை
முடித்து, ஆசிரியராகப் பணியைத் தொடங்கி, இராமநாதன் கல்லூரியில் ஆசிரியராகவும்,
பின்பு உப அதிபராகவும், அதிபராகவும் சேவை புரிந்தவர் திருமதி. சுபத்திராதேவி விவேகானந்தன்
வடமாகாணம் யாழ்ப்பாணம் சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மாணவியான செல்வி சர்விகா
அண்ணாமலை சிறப்புரை ஆற்றினார், க.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்கின்றார். இலங்கை தேசியமட்டத்தில் பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் முதற்பரிசான தங்கப்பதக்கத்தை பெற்றவர்
தலைமையுரை: திருமதி. கலாவதிதேவி மகேந்திரன் யேர்மனி தமிழ்க் கல்விச்சேவையின் உப தலைவி,
யேர்மனி நொயிஸ் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் தொழில் அதிபர் மாவை சோ. தங்கராஜா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பங்குபற்றிய மாணவர்களுக்கு கேடயமும், பதக்கமும் அணிவித்து கௌரவப்படுத்தியமை மிக சிறப்பாகும் ,
இன் நிகழ்வுகளை ஒழுங்கமைத்து செயல்படுத்திய “தமிழ்மணி “ பொன். ஸ்ரீஜீவகன் குடும்பம் , இதன் செயல்பாட்டுக்கு உதவியவர்கள் வாழ்த்துதலுக்கும் பாரட்டுக்கும் உரியவர்கள் ஆவார்கள்,