யேர்மனி டோட்மூண்ட் தமிழ்கல்விச்சேவையின் வள்ளுவர்விழா11.11.2017 நிறப்பாக நடந்தேறியது

யேர்மனி டோட்மூண்ட் தமிழ்கல்விச்சேவையின் 11.11.2017 (சனிக்கிழமை )வள்ளுவர்விழா இவ்வருடம் பல போட்டியாளர்களை உள்வாங்கி, சிறப்பான திருக்குறள் கலைநிகழ்வுகளுடன் இனிதே சிறப்பாக அமைந்திருந்தது

நிகழ்வுகள் காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகி எட்டு பிரிவுகளாக போட்டியாளர்கள் வயது எல்லை பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டதோடு இடையிடைநியே கலைகழ்வுகளும் என இரவு 8.30 வரை பார்வையாளர்களின் உற்சாக கைதட்டல்களுடன் இடம்பெற்றிருந்தது

இதில் கலங்து கொண்ட பிள்ளைகளின் பெற்றேர்கள் தங்கள் தங்கள் பிள்ளைகளின் போட்டி முடிவுகளை எதிர்பார்த்து மிகவும் ஆவலாகயிருந்தனர்.

நான்கு வயது நான்கு மாதமான குழந்தை கடவுள் வாழ்த்து கூறும்போது நடுவர்களின் நிலை, சபை அமைதி, பலர் கண்களில் ஆனந்த கண்ணீரென அந்தபெரிய சபை அமைதியாக இருந்தமை சிறப்பு

இன்நிகழ்வில் பல தூர நகரங்களில் இருந்து இம்முறை போட்டியாளர்கள் பங்கு பற்றியிருந்தமை சிறப்பே. அதைவிட முன்ஸ்ரர் மாநகர கலைவாணிபாடசாலை மாணவர்கள் இருபத்தெட்டு நபர்கள் போட்டியில் பங்குபெற்றியிருந்தமை பாராட்டு. நடுவர்களின் நிலை! எப்படி புள்ளி போடுவதென்பது. காரணம் எல்லாக்குழந்தைகளும் ஒருவரை ஒருவர் மிஞ்சியதாக உச்சரிப்பு, சபை, உயர்தொணி, சைகை, உடை, அனைத்தும் அருமையிலும் அருமை. ஆனாலும் முதல் மூன்று மாணவர்க்கு கேடயமும், பங்குபற்றிய மாணவர்க்கு பதக்கமும் அணிவித்து கௌரவப்படுத்தியமை பெருமையே. விழா அத்தனையும் மிகவும் சிறப்பு.

இன்நிகழ்வை ஒழுங்குற வடிவமைவ‌த்த „தமிழ்மணி “ பொன். ஸ்ரீஜீவகன் குடும்பத்திற்கும் இதன் பின்புல பணியினருக்கும் பாரட்டுக்குரிய செயலாகும் தமிழின் வளர்சிக்காக இவர்கள் பணிதொடரவாழ்த்துகின்றது

 

எஸ் ரி எஸ் இணையநிர்வாகம்