யேர்மனி டோட்முண்ட் நகரில் 19.01.2019 சிறப்பாக நடந்தேறிய பொங்கல் விழா! அற்புதமான பல கலைப்படைப்புக்களுடன் நிறைவாக நடைபெற்றது.
இன் நிகழ்வுக்கு வந்தவர்கள் இதன் சிறப்பை பாராட்டியிருந்ததோடு இந்த ஆண்டு ஆறாவது ஆண்டாக நடைபெற்றது மட்டுமல்ல இதில் பொங்கல் நிர்வாக குழுவினரின் நிதிப்பங்களிப்போடு வர்த்தகர்களின் பங்களிப்பும் இணைந்து இவ்விழா வானது முன்னெடுக்கப்பட்டுவருகின்றது,
இதில் கிடைக்கும் நிதியாவும் கூடியவரை கட்டுப்பாட்டுடன் செலவுசெய்யப்பட்டு மிகுதி அனைத்தும் தாயக உறவுகளின் வாழ்வாதாரத்துக்காக பயன் படுத்தப்பட்டுள்ளது
இதுவரையில்அண்ணளவாக 16 இலட்சம் மட்டில் தாயக உறவுகளுக்காக தெரிவுசெய்து அங்கீகரிக்கப்பட்டவர்களை விசாரிக்கப்பட்டு தகுந்த முறையில் உரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்பதும் சிறப்பு இவர்கள் பணி தொடரவாழ்த்துக்கள்
நிழல் படங்கள் தமிழ் எம் ரி வி சிவநேசன்