யாரைக் காட்டுவாள்!கவிதை கவிஞர் தயாநிதி

 

வாடகைப்
பெண்ணல்ல
விரும்பியவள்
தேடாத
வாழ்க்கையது
கூடாத கூட்டம்
குறிவைத்து
குதறியது..

வேதனை
வலியின் ரணம்..
வெட்கம் அவளை
கட்டிப் போட்டது
அக்கம் பக்கம்
அசிங்கப் படுத்தியது.
சுற்றம் அவளைச்
சுட்டெரிச்சது…

மெளனம்
அடுத்தவர்
பார்வைக்கு
தாளம் போட்டது.
கெட்டவள் என.
வார்த்தைகள்
வதைத்தது..
மரணம் கூட
தூர நின்றது..

ஆச்சாரம்
அபச்சாரம்
கலாச்சரம்
விபச்சாரம்
பட்டங்கள்
இனாமாகியது.
வேசம் போட்டவரும்
நாசம் செய்தவரும்
விருந்துக்காய் காத்து
நின்றவரும் விடுப்பு
பார்த்தனர்..

கல் எடுத்து
எறியும் படி
கூறிட ஆண்டவர்
வரவில்லை..
நாக்கை வளைத்தவர்
ஓயவில்லை
கற்பைத் தின்றவர்
கலங்கவில்லை..
பிள்ளைக்கு
அப்பாவையா
அப்பாக்களையா
காட்டுவாள்.

ஆக்கம் கவிஞர்தயாநிதி

Merken