29.05.2022. அன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று பிரசித்தி பெற்ற வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில். எமது பாரம்பரிய கலைகளில் ஒன்றான. காத்தவராயன் சிந்து நடை கூத்து மிகச் சிறப்பாக பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு மத்தியில் அரங்கேற்றிய தருணம். இந்த கூத்தினை நெறியாள்கை செய்திருந்தார் முல்லைத்தீவு மாவட்டத்தின் மூத்த கலைஞர் திரு மகேந்திரன் அண்ணாவியார் அவர்கள். முல்லைத்தீவு மாவட்டத்தில் மிகச்சிறந்த கலைஞர்கள் இதில் நடித்திருக்கிறார்கள். இந்த நிகழ்வின் ஒளி ஒலி அமைப்பு யோகமா கலைக்கூடம். இந்த நிகழ்வில் மதிப்பார்ந்த அண்ணாவியார் திரு மகேந்திரன் அவர்களுக்கு யோகம்மா கலைக்கூடத்தின் இயக்குனர் திரு குமாரு .யோகேஸ்வரன் அவர்களால் கூத்துக் கலையை முன்னெடுக்கின்ற „கலைக் காவலன் „என்ற பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது .மிகச் சிறப்பாக நடைபெற்ற இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து அநேகமான மக்கள் மிகப் பெரும் திரளாக வருகை தந்திருந்தார்கள். கொரோனா காலத்தின் பின் இந்த நிகழ்வு மிகச் சிறப்பாக அரங்கேறியது. இந்நிகழ்வுக்கு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் பரிபாலன சபை முழுமையான பங்களிப்பை செய்திருந்தார்கள்..