முகாரி பாடு்து உமக்காய்

எங்கு கண்டாலும்எம்முடன்
இனிமையாய் பேசும் ஒரு
இயற்கலைஞன் இன்று
இல்லையே எம்முடன் !!!!
.
பொங்கும் இளமை பூத்திருக்க பூமியை பிரியும் பராயம் தான் வருமுன்னே , பொல்லாத நேரம் வந்ததேனோ???
.
சங்கத்தமிழின் வளர்ச்சிக்காய் என்றும்
சாதிமதபேதமின்றி சமத்துவக்கொடி காட்டி சளைக்காது நின்ற சாமானியனே !!!
.
தங்கமான குணம் கொண்ட
தலை மகனே பாதிவாழ்வில்
தரணியை துறந்ததேனோ?
மீதி வாழ்வில் தனித்த உறவுகளை மறந்ததேனோ ???
.
சிங்கத்தை பெயரில்க் கொண்ட
சாதுவான உருத்திரரே நீரும்
சடுதியான மீளாத்துயில் கொள்ளச் சம்பவித்ததேனோ ???
.

லங்கையை விட்டுப் பிரிந்து அன்று இங்கே பாரிசில் பலகாலம் வாழ்ந்து அங்கிருந்தும் பாதியிலே பரலோகம் பறந்ததேனோ ???
.
மங்கை மக்கள் மண்டியிட்டழ
மற்ற உறவினர் மனதுக்குள் அழ
சொந்த பந்தம் சோர்ந்துபோக
சொல்லாமல் போனதேனோ ???
.
எங்கே ஐயா போனீரோ ?
முகவரிகூட கூறாமல்
அத்தனை அவசரம் தான் எனோ .
முத்தான உறவுகள் இங்கே
முகாரி பாடு்து உமக்காய் .
.
இலண்டன் திடீர் நாடக மன்றம்