மாவீரரே வணக்கம் .


கண்ணீரில் விளக்கேற்றி கமலப்பூ உடன் சாத்தி நினைவலையால் ஆலாத்தி
குமுறி நெஞ்சு புடைக்கவந்தோம். குழியில் இருந்து எழுப்பவந்தோம்
மாவீர செல்வங்களே
ஒரு கணம் விழிதிறவும் .
சுடுகாடாய் ஆனதெங்கள் தமிழீழத்திருநாடு .

மண்சோறு திண்கின்றோம் கண்ணீரில் கரைகின்றோம் கையெடுத்தும் கண்திறவா
மனிதர் பின்னே அலைகின்றோம் .
கருவறைக்கும் எட்டவில்லை தெருவெங்கும்
அடி தொழுதோம்
எம் அடிச்சுவடி காணவில்லை .
கல்லறை
தேடிவந்தோம்
எம் விம்மலை
ஆற்ற இங்கு
மாவீர செல்வங்களே
ஒரு முறை கண்திறப்பீர் .

ஆறுதல் வார்த்தை இன்றி அனாதைகள் ஆகிவிட்டோம்
நாய் நரி வேட்டை ஆடும் வேள்வி ஆடு ஆகிவிட்டோம் பாய்ந்திடும்
புலிகள் இன்றி புல்லுருவிகள் சீண்டுதிங்கே மாவீரர்களே வீரார்களே மறுபடியும் வாரும்மிங்கே
எம் இனத்தின் விடிவுதன்னை யாரிடத்தில் விட்டுச்சென்ரீர் .

கோசம் போட்டோர் கொள்கை எல்லாம் வேசம் என்று ஆனதின்று மேடை மேலே
வேடம் இட்டு
திரை மறைவில் ஆடுகிறார்
ஊர் உலைக்கு கொல்லியிட்டு
தம் உடல் காய்கிறார் .
நூறுமுகம் நூறு குணம் யாரும் இங்கே
மனிதர் இல்லை
எம் நிலத்தை மீட்டுத்தர மாவீரர்களே பிறப்பெடுப்பீர் …

வே .புவிராஜ் …
25/10/23 …

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert