மானிப்பாய் இந்து மகளிர் கல்லூரி.பொன் மாலைப்பொழுதில்கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர்

 

 

மானிப்பாய் கோவில்பற்று சுதுமலை,ஆனைக்கோட்டை ,நவாலியை உள்ளடக்கிய ஒரு சமுக வலை…இங்கு ஒரு சிறந்த கலை.கலாசாரம்.பாரம்பரியம்.பண்பாடு விருந்தோம்பல் அன்றும் இன்றும் பேணப்படுகிறது..இதற்க்கு முக்கிய காரணியாக ,மானிப்பாய் இந்து கல்லூரி.மானிப்பாய் இந்து மகளிர் கல்லூரி.இங்கு கல்வியோடு மேற்கூறியவைகளும் போதிக்கப்படுகிறது என்றால் மறுப்பவர் இல்லை…


சென்ற 17 -06-3017 மாலை ஜெர்மனி வாழ் மானிப்பாய் இந்து கல்லூரி .மகளிர் கல்லூரி பழைய மாணவர் ஒன்றிணைந்து …பொன் மாலைப்பொழுது என்ற நிகழ்வை நடத்தினர்…

விழாவிற்கு சுவிசில்வாழும் குவபதி.கந்தசாமி..பிரான்சில் வாழும் கலைஞர் தயாநிதி தம்பையா அவர்களையும் அதிதிகளாக அழைத்திருந்தனர்..

மங்கள விளக்கேற்றல் ,கல்லூரி வாழ்த்துப்பாடல் ,அதிலும் புதிதாக வடிவமைக்க்பெற்ற கல்லூரி அடையாள முத்திரையுடன் ..ஒரு புதிய யுகத்திற்கு சென்றது போல் மனதில் ஒரு புத்துணர்வு..கலைஞர்கள் உரிய முறையில் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்..பல கலை நிகழ்சிகள் நிகழ்வும் இடம் பெற்றது..

மக்கள் மகிழ்வோடு ரசித்தனர்..மொத்தத்தில் இலவச உணவு பரிமாற்றங்கள் விழாவை மேலும் மெருகூட்டியது…இந்த விழாவை முன்னின்று நடாத்திய விக்னேஸ்வரி பதமநாதன் (vicky Nathan ) உறுதுணையாக தோளோடு தோல் நின்ற அவர் கணவன் பத்மநாதன்…அசோகன் யாழினி தம்பதியினர்..ஈசன் தம்பதிகள்..சிவா சுபாஜினி தம்பதிகள்.ஜோதி..பவளராணி சிவானந்தராஜா போன்றவர்கள் துணையுடன் மிகவும் சிறப்பாக நடை பெற்றது… இங்கு நாம் சந்திந்த உறவுகளை பிரிந்து வருபோது மிகவும் வருத்தமாக இருந்தது….ஒரு நல்ல நிர்வாக திறமை உள்ளவர் என்பதை விக்கி நாதன் நிரூபித்துள்ளார்..