நாடு போகும் நிலையறிந்து
நடக்க வேணும் தம்பி .
கூடு விட்டு ஆவிபோனால்
திரும்பிடாது தம்பி .
வீடு விட்டு வெளியே போனால்
வினையிருக்கு தம்பி .
வீட்டிலுள்ளோர் குழந்தைகளும்
இருக்கிறார் உன்னை நம்பி.
பாடுபட்டு உழைப்பதற்கு
வழியில்லைதான் தம்பி .
தேடி வரும் வறுமை கண்டு
உடைந்திடாதே வெம்பி .
மாடு போன்று வீதிகளில்
அலைந்திடாதே தம்பி .
கேடு வரும் கேட்டிடுவாய்
குதித்திடாதே எம்பி .
கூடுவாரின் சேர்க்கை நீக்கி
வீட்டிலிரு தம்பி .
கூறியதை மீறிச் சென்றால்
எண்ணிடுவாய் கம்பி .
கவிஞர். ஏரூர் கே. நெளஷாத்