உன்னைக்கரம்பிடித்த நாள்முதலாய்
உன்பின்னே நான்வருவேன்
கண்ணின் மணியெனவே
காத்துவந்த கட்டழகா
நீயே கதியென்றே
உன்னைச்சரண்டைந்தேன்
நீபோகும் வழியெங்கும்
வழித்துணையாய் நான்வருவேன்
வேட்டியை மடிச்சுக்கட்டி
என்ரை ராசான் வருகையிலே
எனக்கென்ன குறையிருக்கு
நகைநட்டும் எனக்கில்லை
நாலுபணம் கையிலில்லை
பாசத்துக்கோ குறைவில்லை
மனப்பாரம் ஏதுமில்லை
சொத்துசுகம் ஒன்றுமில்லை
சொந்தபந்தம் கூடவில்லை
பிள்ளைகளும் தாங்கவில்லை
அவர்களுக்குப்பாரமாயும்
நாமுமில்லை
போகும்வழி தெரியவில்லை
சாகும்விதி வரவுமில்லை
கூன்விழுந்த எங்களுக்கு
ஊன்றுகோலே துணையாச்சு
சாகும்வரை எங்கள்காதல் எள்ளவும் குறையவில்லை
பிரிந்துபோகும் காதலர்க்கு
எங்கள் வாழ்வுபாடமாகும்
காதல்செய்த காதலரே
கடைசிவரை கூடிவாழுங்கள்
கட்டையிலே போனாலும்
ஏட்டில் உங்கள்பெயர் நிலைத்துநிற்க்கும்
வரும் சந்ததியும் உங்கள் வாழ்வை பின்பற்றிவாழும்
இதுவே நாம் சொல்லும் வாழ்க்கைத்தத்துவம்
(கவி ஆக்கம் கவிஞர்-மயிலையூர்இந்திரன்)