மயக்குதடி மாலை..!கலைத்தாயின்மகன்கலைஞர் தயாநிதி

ஓரெழுத்தில்
உன் பதில்
கிடைத்தாலும்
ஈரடிக் காவியம்
திருக் குறளாய்
தித்திக்குதடி..

எத்தனை
உயரங்களை
எட்டி நான்
தொட்டாலும்
உன் மனம் தொட்ட
நாள் இனிக்குதடி.

ரசணைகள்
புது ரகமடி
சொல்வதிலும்
எழுதுவது பெரும்
சுகமடி. எல்லாம்
வரைந்திட காலம்
போதாதடி.

நம்மிடையில்
நாட்கள் நகரும்
காலங்களில்
பிடித்ததை செப்பிடு
அதை உனக்காய்
படைப்பதும்
நிறைவடி..

முகத்திரை போட்டாலும்
அகத் திரையில் உன்
அழகு கொல்லுதடி.
அடி அடி என
ஒவ்வொரு அடியிலும்
டி..விழுவதும்
உரிமையின்
நிமிர்த்தமடி.இது
கவிைதைக்கும்
பொருத்தமடி..

வாலியாகி
வலி மறந்த காதலையும்
கண்ணதாசனாகி
மனம் தொட்ட
வனப்பையும்
புதுவையாகி
எழுச்சியையும்
சூத்திரங்களை
அறிந்ததால்
விபத்தில்லா
கனிரசங்களையும்
படைக்கின்றேன்…

படி..படிப்
படியாய் உன்
மன வாசல்ப்
படி நாடி வரும்
கவிதைகளால்
கூடு ஒன்று கட்டு
கூடி வாழலாம்..