பெண்களின் படங்களையும் அவர்கள் சம்மந்தப்பட்ட ஒளிநாடாக்களையும் இணையத்தில் அம்பலப்படுத்தி சுகம் காணும் பலர் உண்டு. அவர்கள் மனிதம் அற்ற கேவலங்கள்.
அதிலும் தற்போது இலங்கை இராணுவத்தினரால் எம் பெண் போராளிகளும், ஏனைய அக்கா தங்கையரும் சிதைக்கப்பட்ட ஒளிநாடாக்களை இணையத்தில் ஏற்றி அவர்கள் மீள்வாழ்க்கையையும் சிதைக்கும் சில எம்மினப் பிள்ளைகளின் ஈனச்செயலால் பாதிக்கப்படும் பல சகோதரிகளின் கோபத்தையும், ஆதங்கத்தையும், கவலையையும் சொல்லும் குறும்படம் இது.
„மன்மதன் பாஸ்கி“ஈழத்தின் அற்புதக் கலைஞன்.
இவனின் இயக்கத்திலும் நடிப்பிலும்
உருவாகியுள்ள இந்தப்படத்தை அனைவரும் ஒருமுறை பார்க்க வேண்டும்.
ஒரு பெண்ணின் வலியை சொல்லும் தங்கையாக, நிஜமாகவே கர்ப்பவதியான கதைநாயகி.
படத்தில் யாருமே நடிக்கவில்லை. அனைவரும் இந்த படைப்பின் முக்கியத்துவத்தை உள்வாங்கி உண்மையாகவே உணர்வுகளைக் கொட்டியுள்ளார்கள்.
மன்மதன் பாஸ்கி, ஒரு உண்மையான கலைஞன் எப்படி இருக்க வேண்டும் என்று வாழ்ந்து காட்டும் அதிசயம் என்றால் மிகையாகாது.
படைப்புக்கள் மூலம் சமுதாயத்திற்கு தேவையான, முக்கியமான கருத்துக்களைச் சொல்வது ஒரு கலைஞனின் தலையாய கடமை என்பதை நன்குணர்ந்த நல்மனிதன்.
இப்படைப்பை கொண்டுவர உழைத்தவர்களுக்கும், கனடாவில் காட்சிப்படுத்த வழிசெய்த பிரான்ஸ் LIFT அமைப்புக்கும், இங்கு காட்சிப்படுத்த உழைத்த சகோதரி Dharshi Vara, ஏனையோருக்கும்
வாழ்த்துக்கள்