மண்ணையும் பொண்ணாக்கும் மனிதா
மலையேறி சிகரம் தொடும் நீ
மனிதம் வாழ என்ன செய்கிறாய் .?
நாடெல்லாம் வன்முறை
நாளும் கொலை கொள்ளை
வீடுகள் பற்றிஎரிய விளக்கம் ஏன்..?
தேடிய செல்வம் நிரந்தரமா
தேவைக்கதிகமாய் உனக்கு உதவுமா
இருந்தும் சுரண்டலும் சூதும் ஏன் ..?
பள்ளியறையில் பாடம் நடக்கும்
பள்ளிக்கூடங்கள் கோயிலாகும்
அங்கும் காமுகர்கள் உலாவருவதும் ஏன்.?
சாமியார் வேடங்களில் பலர்
காவிக்குள் காமலீலை
விட்டில்களாய் பலர் வீழ்கின்றனரே ஏன்..?
கொஞ்சும் எழில் குழந்தை
ஏசுவைப்போல அறைப்படுகின்றனரே
இதுவும் மனிதமிருக மனிதமா ஏன்…?
இனவொழிப்பு இடைஇடையே மதவொழிப்பு
மாறிமாறி தடைகள்
மனிதர்கள் .வாழ்வதா சாவதா ஏன்.?
குரங்கிலிருந்து பிறந்ததினால் மனிதன்
மீண்டும் குரங்கின மருவலோ
நாளை இருப்போர் மனிதரை புசிக்கும் கிட்லர்கள் தானோ ஏன..?
எங்கு செல்ல எதைச்சொல்ல
ஏன் என்ற கேள்விக்கு விடையென்ன
மனிதர்களே சொல்லுங்கள் மனிதம் வாழ்கிறதா…?
கவிச்சுடர் திருகோணமலை