மண் பானையில்
கடைந்த தயிரே
மனப் பானையை
குடைந்த மயிலே..
கண் வில்லையில்
கலந்த ஓவியமே
நாசினில் நிறைந்த
நல் சுகந்தமே…
செவிகளில் ஒலித்த
சேமக்கல ஓசையே…
கலகலவென உதிர்த்த
முத்துப் புன்னகையே….
முத்தங்களால் என்
மூச்சிரைக்க முயன்றவளே.
உடைந்த மண்பானையானதடி
சேர்த்து வைச்ச காதல்..
மொத்தத்தில் என்னைக்
கவிழ்த்த காரிகையே
காலை வாரிய தூரிகையே
கனடாக்காரன் கை பிடித்து
கடல் கடந்ததேனடி….
கறுப்புத்தான் புடிக்குமென
பாடிப்பாடியே கொன்றவளே
கை மாறிப் போனதென்ன.
போனது தான் போனாய்
போன இடத்திலும்
மாறாமல் இருந்திடடி…
மறந்தும் நான் உன்
மன மடியில் இருந்து விட்டால்
மறக்காமல் இதய மடிப்பு
கலையாமல் இறக்கி
வைத்திட்டு போயிடடி.