மண்ணில் மனிதராய் பிறந்து
விண்ணில் போகும்வரை
மனிதரில் எத்தனை மாற்றங்கள்!
பெற்றோருடன் சகோதரங்களுடன்
கூடி இருக்கும்போதும்
பிறந்தவீட்டில் இருந்து
திருமணமாகி புகுந்த வீட்டில்
புதிய உறவுகள் பொறுப்புக்கள்
வாழ்வே மாற்றங்களாக மாறிவிடும்!
ஊரில் உறவுகளோடு ஒருவாழ்க்கை
ஊரைவிட்டு ஊர்மாறி ஒருவாழ்க்கை
நாடுவிட்டு நாடு சென்று ஒருவாழ்க்கை!
நம்மோடு பழகும் உண்மையானவர்களும்
வஞ்சனையோடும்,பொறாமையோடும்
பழகும் சிலரோடும் வாழ்கின்றோம்
நாம் வாழும்வரை மாற்றங்களோடுதான்
மாறிக்கொண்டு ஓடுகின்றோம்
சந்தோஷமாகவும் இருக்கும்
துன்பமாகவும்சங்கடமாகவும்
சிலவேளைகளில் இருக்கும்
ஆனால் வாழ்கையில் மாற்றங்கள் வரும்
ஆனால் மனிதமனங்கள் மாறவேகூடாது
உண்மையாக வாழ்பவர்கள் நிரந்தரம்
அவர்களுக்கே ஆண்டவன் தரிசனம்
(கவிதை ••மயிலையூர்இந்திரன்)