மடமையை கொளுத்துவோம்!கவிதை மட்டுநகர் கமல்தாஸ்

 

ஆயிரம் பேருக்கு தானம் செய்து
போக்கும் பாவத்தை
தாயின் மனதை குளிர வைத்தால்
பாவப்பதிப்பு மறைந்து விடும்

ஆயிரத்தெட்டு கோயில்கள்
சென்று வணங்கிப்பெறும்
ஆசிகளை அம்மாவைதொழுதால்
கிடைத்து விடும்

நூற்றியெட்டு தேங்காய் உடைத்து
பெறும் நன்மைகளை விட
நூற்றாண்டுகள் வரை தாய்
நமக்காக செய்த நன்மைகள்
ஏராளம்

நவக்கிரகங்களை வலம் வந்தால்
தொல்லைகளைஅகற்றிடலாம்
என்று ஐதீகம் உரைக்கின்றது
நமக்காக எம்மோடு வாழும்
தாயை வலம் வந்தால்
தொல்லைகள் அண்டாது

பசியென்றால் எதுவென்று தெரியாது
அம்மாவோடு இருக்கையில்
பசியென்றால் உயிர் வலியென்று
அறிந்தேன் அவளை பிரிந்து வாழ்கையில்
அறியாமையை எரிப்போம்
அன்போடு வாழ்வோம்

மடமையை கொளுத்துவோம்
மங்கையை மதிப்போம்
மனிதராய் வாழ்வோம்
கடமையை செய்வோம்
பாவச்சுமையிலிருந்து பிரிவோம்

ஆக்கம்  -மட்டுநகர் கமல்தாஸ்