~~~மகேசன் தீர்ப்பு~~~

மொபைல்போன் என்ற ஒரு பொருளால்
மகத்தான பலவிடயங்களை இன்று
மனிதன் இருந்த இடத்தில் இருந்தே
மிக எளிதாகவும் துல்லியமாகவும்
மறுகணமே அறிந்து கொள்கிறான் .
.
முழு உலகமே அவன் கைக்குள் அடங்கிய
மனநிலையையே அவன் உணர்கிறான்.
மாற்றம் ஒன்றே மாறாதது இவ்வுலகில் .
மாறிவிட்ட மொபைல் கலாச்சாரத்தில்
முகநூல் எனும் ஜனரஞ்சக ஊடகமே
முதல் நிலை என்றால் மிகையாகாது .
மனதுக்கு பிடித்தவரின் அன்றாடவாழ்வின்
மாற்றங்களையும் மனநிலையையும்
முகநூல் ஓரளவு காட்டித்தருக்கிறது .
முன்னரெல்லாம் உயிர்களுக்கு தரும்
மரியாதையை இப்போதெல்லாம் உயிரற்ற
மொபைல்த்தேவதைக்கே கிடைக்கிறது.
மறந்து வீட்டிலேயே விட்டுச்செல்வதும்,
மறதியால் தொலைத்துவிட்டுத்தேடுவதும்
மக்கள் மத்தியில் இப்போதெல்லாம்
மருவிவரும் வியாதியாகி விட்டது எனலாம்.
மனிதமுகத்துக்கு தரும் மரியாதையை விட
மொபைலுக்கும் முகநூலுக்குமே அதிகம்.
முதியவர் முதல் இளையவர் வரை இன்று,
முகநூல் வசமே,இது முன்னேற்றமா அல்ல,
மாறிவரும் கலாச்சாரத்தின் சீர்கேடா ?
மலிவு விலையில் மானத்தை விற்கும்
மாபெரும்சந்தை முகநூலாம் உண்மையா?
மக்களே என் அன்பு அபிமானிகளே இதை
மானமுள்ள உங்களிடமே விட்டுவிடுகிறேன்
மக்கள்தீர்ப்பே மகேசன் சொன்னபதிலாம்.
~~
முக நேசன்.