மகளை
மணந்த
மருமகனைத் தன்
மகனாகவே
மாற்றிப்பார்க்கும்
மாதாக்கள்,,,
மகனை
மணந்து
மகிழ்விக்க வென்று
மனாளனைத் தேடி
மனையேறி வந்த
மங்கையை
மட்டும்
மாற்றான்
மகளாகவே , எண்ணி ,
மனதால் ஏற்றிடாது,
மருமகளோடு
மல்லுக்கு நிற்கும்
மாமியார்கள் ஆகியே,
மங்கையர் குலத்தை,
மானபங்கம் செய்வதேனோ ?
மாதவம் இருந்து
மகப்பேறாய் பெற்றவன்
மகனாக இருக்கையில்
மடிநிறைய பாசத்தையும் .
மாதொருத்தியை
மனைவியாக்கி விட்டதும்
மாற்றான் ஒருவனாகவும்
மகனை எண்ணித்தன்
மனதை
மாற்றிக்கொள்ளும்
மாதாக்களின்
மனநிலைக்குப் பெயர்தான்
மனநோய் என்பதா ?
…
மாமி நேசன்