பொருளுணர்வீர்.!கவிதை கலைஞர் தயாநிதி

காத்திருப்புக்காய்
காலையிலே
பூத்திருப்பேன்..

மலை வரை
காக்க வைத்தவரோ
வருவதில்லை.

என்னை
தன் கண்களில்
கண்டவர்கள் கேள்வியின்றி
கொய்கின்றனர்…

தினம் தினம்
தோல்வியிலேயே
முடிகின்றேன்..

மாலையிலே
தொடுத்தவரும்
மாலையிலேயே
வீசுகின்றார்..

ஏது பாவம் நான்
செய்தேன்.
மேசையிலும் பூஜை அறையினிலும்
வைத்து மகிழ்வோர் அன்று
மாலையிலேயே வீசுகின்றார்..

அழகு ஆபத்தானது
ஆயுள் வரை நிலைக்காதது
ஆண்டவன் கூறும்
மெய் ஞானப் பொருளிதுவோ…

எனக்காக எவருமில்லை
எனக்கான எல்லையுமில்லை
எனக்கான ஆயுளில்
மாற்றமொன்று நேராதோ…

ஆக்கம் கலைஞர் தயாநிதி