புலம்பெயர் ஈழத்து நட்சத்திரமான மன்மதன் பாஸ்கி நடித்த பிரென்சு திரைப்படமான LE SENS DE LA FETE திரைக்கு வரத் தயாராகிவிட்டது.
எதிர்வரும் ஒக்ரோபர் 2ம் திகதி முதல் நாடுமுழுவதும் இத்திரைப்படம் அரங்குகளைக் காண இருப்பதற்கான விளம்பரங்கள் வெளிவந்துவிட்டன.
இத்திரைப்படத்தில் மன்மதன் பாஸ்கியுடன் இணைந்து அங்கிள் சிறி அவர்களும் நடித்துள்ளார்.
படலைகுப்படலை எனும் தொலைக்காட்சி நாடகத்தின் மூலம் புலம்பெயர் தமிழ்மக்களிடத்தில் பெருத்த வரவேற்பினைப் பெற்றுள்ள இரட்டை நகைச்சுவை கலைஞர்களாக இருவருக்கும் இருக்கின்றனர்.
மன்மதன் பாஸ்கி அவர்கள் நடித்திருத்த GUN AND RING எனும் திரைப்படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவின் சங்காய் திரைப்பட விழா உட்பட பல்வேறு திரைவிழாக்களுக்கு சென்றிருந்தது.
தற்போது இப்பிரென்சுப் படத்தில் முக்கிய பாத்திரம் ஏற்று பாஸ்கி நடித்திருக்கின்றார்.
இப்படத்தின் முன்னோட்ட திரையிடல்கள் பல்வேறு நகரங்களிலும் திரையிடப்பட்டு வரும் நிலையில் வரும் சனிக்கிழமை பாரிசில் சிறப்பு திரையிடலாக வருகின்றது.