விழித்ததும்
விடுப்பறியும்
மன நிலை உருவாச்சு.
அந்த நாட்டில்
எத்தனை
இந்த நாட்டில்
எத்தனை என
கணக்கெடுப்பு.
போர்க்கால
நிலைப்பாடு உருவாச்சு.
எதுக்கடா
கணக்கெடுப்பு
கணக்கெடுக்கமல்
நாளைய நிலைப்பாட்டுக்காய்
நித்தம் உழைப்பவனை
கூவி அழைத்து
கதையளக்கும் காலமாச்சு.
இணயங்களை
புரட்டி கட்டவிழ்ந்த
புழுகு மூட்டைகளை
கட்டவிழ்த்து கதி கலங்கும்
நிலை வாழ்வாச்சு.
இணைத்துக் கொண்ட
இணயாளோடும்
இன்பத்தின் அறுவடைகளோடும்
ஆயிரம் விடையங்கள்
பகிருரும் தருணமிது.
கடந்து வந்த பாதை
பட்டுத் தெறித்த உபாதைகள்
அகதி முத்திரை பொறித்த
பெரும் கதைகள்
இரைமீட்கலாமல்லவா..
ஆணிவேரின்
ஆழமான தேடல்
ஆவுதியான வீரர்களின்
வீர வரலாறுகள்
எங்களின் அடையாளங்கள்
பற்றி இயம்புங்கள்.
மனித நேய பண்புகளை
புரட்டுங்கள்
பிற உயிர்கள் மீதான
அன்பினை ஊட்டுங்கள்.
மகிழ்வோடிருங்கள்
பெற்றவர்கள் உற்றவர்கள்
உயர்வுக்கும் உறு துணையாகிடுங்கள்.
காலச் சக்கரம்
ஒரு நிலையில் நிற்பதில்லை.
நம்பிக்கையே தும்பிக்கை பலம்..
புன்னகை என்றும் புதிரல்ல..
கவிஞர் .ரி.தயாநிதி