புது மொழி..!கவிதை கவிஞர் தயாநிதி

கட்டுக்குள்
அடங்காதோரை
காலம் பார்த்து
கால் கட்டு
போட்டு முடக்கிய
காலங்கள்
காலாவதியானது..

இன்று
வீட்டுக்குள்
தனிக் கூட்டுக்குள்
கட்டிப் போட்டு
வேடிக்கை
காட்டுது கணணீ..
கண்ணீருக்கும்
காரணமாகிறது,,

தனிமைச்
சிவர் எழுப்பி
தலை எழுத்தையே
மாற்றி வித்தைகள்
காட்டுது கணணீ
பத்துப் பொருத்தமும்
கூடிக் கை பிடித்த
குடும்பமும்
குளப்பத்தில்….

சற்றிங் என
தொடங்கி தொலை
நோக்கெதுவுமின்றி
வரிகளின் ஜாலத்தில்
இருப்பையும் இழந்து
விருப்பையும் உருக்கி
விபரீத விளையாட்டின்
கட்டுக்குள் கணணீ..

கண்டதை கற்றவன்
பண்டிதனானான்
என்றது பழமொழி
இன்று கண்டதையும்
கிறுக்கி் கவிஞனாகலாம்
விருப்புகளை போடுபவன்
விமர்சகனாகலாம்
கணணீ காட்டிய
புது மொழி..இது..

ஆக்கம் கவிஞர்தயாநிதி

Merken