என் மனது உனக்கு தெரிகிறதா
அது புனிதம் என்று புரிகிறதா
என் அறிவும் ஆற்றலும் தெரிகிறதா
அவைதான் என் பலம் புரிகிறதா
என் அழகை பார்த்து விரும்பினாயா
என் அசைவுகள் உன்னை தொந்தரவு செய்ததா
அழகு என்பது நிரந்தரமில்லை
அது தோலின் ஆழத்தில் மட்டுமே
என் அசைவுகள் எல்லாம் என் இளமையில்தான்
ஆனால் ..
என் உண்மையான அழகு என் மனசு.
அதை அறிந்துகொள்ள முயற்சி பண்ணு.
உன் சுபாவம்,உன் போக்கு எனக்கும் பிடித்திருக்கிறது
போகப் போகப் பார்க்கலாம்.
ஒன்று தெரிந்து கொள்
பழங்காலத்தில் நாமில்லை.
இங்கு
பழமைகள் பேச வாய்ப்பில்லை
பழகிப் பார்த்தே விரும்பிடுவோம்
ஒத்துப்போனால் பார்த்திடுவோம்
சாதகம் பார்க்கத் தேவையில்லை
சாதி எதுவென அறியத் தேவையில்லை
மேதினியில் நாம் வாழ்வதற்கு
குலம் கோத்திரம் ஒன்றும் அவசியமில்லை
இருமனம் கலந்தால் திருமணம் என்பதும்
இன்றைய திகதிக்கு சரிப்பட்டு வராது.
ஒரு வருடமோ இரண்டு வருடமோ
பழகிப்பார்ப்போம் அதில் தப்பில்லை.
பிடித்திருந்தால் கைப்பிடிப்போம்.
இல்லையென்றால் ஒதுங்கிடுவோம்
என்ன சொல்கிறாய் யோசித்து சொல்லு.
கோவிலூர் செல்வராஜன்