ஊருக்குள்ள ஊளையிடுது சில நரிகள் கூட்டம்
ஊரைத் திருத்த இவர்கள் சாலைப்போராட்டம்
காலைப் பிடித்துக் காலம் கடத்தும் மூடர்கூட்டம்
நாயைப் பிடித்து நடு வீட்டில் விட்டால் வாலைத் தான் ஆட்டும்
சேவையென்ற சொல்லு விலையாகிப் போச்சு
நோவில்லாமல் நுங்கு தின்னும் காலமாகிப் போச்சு
தேவையென்று வரும் போது காலைப் பிடிக்கும் பேச்சு
நாவை அடக்கச் சொல்லும் நாளை அவன் வளர்ச்சி
அரசி, பருப்பு ஒன்று தான் பாமர ஏழைகளின் அரசியல்
ஆதரவற்ற ஏழைக்கு வாய்கரிசிகள்
அரசு அமைச்சு எல்லாம் போலிகள்
அறியாத ஏழைகள் என்றுமே ஏமாளிகள்
அரசியல்வாதி ஊழல் இல்லாதவனாக இருக்கணும்
அரச வைத்தியன் இலவசமாக நோயாளியைக் காக்கணும்
ஆசிரியன் கல்வியை விற்பதை மறக்கணும்
ஆறறிவு உள்ளவர்களாக இவர்கள் அனைவரும் இருக்கணும்
பணம் உழைக்க ஆயிரம் வழி
பாட்ஷா படத்தில் சொல்லுவான் ரஜனி
பாடையிலே போகயிலே வெறும் வெள்ளத்துணி
பத்திரப் படுத்திய பணம் கடைசியில் என்ன கெதி
தான தர்மம் செய்ய சொல்லுது மார்க்கம்
தானே தின்று அழிப்பதும் சேர்ப்பதும் மூர்க்கம்
நாளைய சந்ததி உன்னையே பார்க்கும்
நல்வழி இல்லாத எதுவும் நரகிலே சேர்க்கும்
ஆக்கம் கவித்தென்றல் ஏரூர்