பிரெஞ்சு தமிழ் அகராதியை தொகுத்த முதல் தமிழர்! பேராசிரியர் முனைவர்,ச.சச்சிதானந்தம்

பிரெஞ்சு தமிழ் அகராதியை தொகுத்த முதல் தமிழர்! பிரான்ஸில் வாழ்ந்து வரும் பேராசிரியர் முனைவர்,ச.சச்சிதானந்தம் அவர்கள்!! 08.09.18)
09.09.2018 ஆகிய இருதினங்கள் பாரிஸில் நடைபெறவுள்ள 3வது ஐரோப்பிய ஆய்வியல் மாநாட்டின் முதன்மை அமைப்பாளருமாகிய கல்வியாளர் ச.சச்சிதானந்தம் அவர்கள் யாழ் கரவெட்டியை பிறப்பிடமாக கொண்டவர் பிரான்ஸில் 70 களின் பிற்பகுதியிலிருந்து வாழ்ந்து வருபவர்.

கற்ற மொழிகள் 10 – தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜேர்மன்,தெலுங்கு, சமற்கிருதம், இந்தி, சிங்களம், இலத்தீன், எஸ்பெறென்ரோ,(எஸ்பெறென்ரோ-செயற்கை மொழி)

கல்வித்தகுதி
பிரெஞ்சு மொழி Alliance Francaise -பரிஸ் (1980-1981),University of Sorbonne -Paris (1981-1982)
மருத்துவக் கல்வி University of clude Bernard -faculty of Alexis carrel, Lyon (1982-1984)
உளவியல் கல்வி University of villetaneuse(1983)
முதுகலை -மொழியியல் National institute of Oriental Languages and civilisations-university (1984-1986)
Diploma in perfection in English and standardisation in German -Dialangues(1992)
முனைவர் பட்ட ஆய்வுக்கு அனுமதி :Pandicherry university (1998)
ஆய்வேட்டின் தலைப்பு :மோலிஎரின் நாடகங்களில் மொழியாளுமை வழி சமூக வாழ்வியல் வெளிப்பாடுகள்.
அகராதியியல் முனைவர் பட்டம் – தமிழ் பல்கலைக்கழகம் (2009)
ஆய்வேட்டின் தலைப்பு: தமிழ் -பிரெஞ்சு அகராதியில் உள்ளமைப்பு வளர்ச்சியும் வரலாறும்.
தமிழ் அகராதியியலின் வளர்ச்சிப் போக்குகள்.
தமிழ் அகராதிகளின் அமைப்பும் உள்ளடக்கமும்
ஐரோப்பிய அகராதியியலின் தோற்றமும் வளர்ச்சி நிலையும்
பிரெஞ்சு அகராதியியலின் வளர்ச்சிப் போக்குகள்.
தமிழ் -பிரெஞ்சு அகராதிகளின் வளர்ச்சிப் போக்கும் உள்ளடக்க அமைப்பு வரலாறும்-ஒப்பாய்வு.

எழுதிய நூல்கள் 20
1.பிரெஞ்சு மொழி எனது நண்பன்
2)அகராதி பிரெஞ்சு -தமிழ் (1985 ஆண்டு)
3)பிரெஞ்சு இலக்கணம் (1993)
4)இக்கால ஆங்கிலம் (1993)புலம்பெயர் நாட்டில் முதலில் வெளியான தமிழ் வழி ஆங்கில நூல்)
5)பிரெஞ்சு சிந்தனைகள் (1997) பிரான்ஸ் பிரெஞ்சு மொழி பிரஞ்சியர் தொடர்பாக கட்டுரை வடிவில் வெளியான தமிழ் நூல்)
6)பிரான்ஸ் நாடும் பிரெஞ்சு மக்களும் (1997)
பிரான்ஸ் வரலாறு பண்பாடு பற்றி தமிழில் வெளியான முதல் அறிவுக்களஞ்சிய நூல்)
7)தமிழருக்கான பிரெஞ்சு மொழி வழிகாட்டி (1997)புகழ்பெற்ற. L“ Harmsttan பிரெஞ்சு பதிப்பகத்தில் வெளியான தமிழரொருவரின் இரு மொழி நூல்)

8)நடைமுறை அகராதி பிரெஞ்சு -இலங்கைத் தமிழ் -Dictionnaire pratique -tamoul srilankais (1997)L“harmattan பிரெஞ்சு பதிப்பகத்தில் வெளியான முதல் பிரெஞ்சு -தமிழ் அகராதி

9)விளக்கமான நல்ல பிரெஞ்சு 2 அடங்கல்கள் (2002)

10)ஆங்கில பிரெஞ்சு மொழிகளின் ஒப்பீட்டு கற்கை

11)சொல் வங்கி தமிழ் -ஆங்கிலம் -பிரெஞ்சு சொல்லகராதி(2008)

12)சொல்லகராதி தமிழ்-ஆங்கிலம் (2008)

13)சொல்லகராதி ஆங்கிலம் – தமிழ் (2008)

14)English -French (2008) சிறுவர்களின் நடைமுறை தேவைகளுக்கமைய (Thematic vocabulary)

15)vocabulaire thematique :Francais-Anglais(2008)

16)vocabulaire thermatique :Francais-tamoul
புகழ்பெற்ற Ophris பிரெஞ்சு பதிப்பகத்தில் வெளியான. இருமொழி அகராதி (2008)

17) சொல்லகராதி தமிழ் -பிரெஞ்சு (2010 பிரெஞ்சு Ophris வெளியீடு

18)தெளிவான பிரெஞ்சு இலக்கணம் (2010)வினா விடை முறையில் பிரெஞ்சு இலக்கணம்)

19)தெரியத் தெரிய தெரியாமை தெரியும் (2015)
மொழியியல் பிரான்ஸ் அறிவியல் தொடர்பான 36 கட்டுரைத் தொகுதி)

20)சொல் உலகம் :World of world (தமிழ் -ஆங்கிலம் -பிரெஞ்சு சொல்லகராதியுடன் சொற்பிற்பில் அறிவுக்களஞ்சியம்)

பணி :::
„““““““““““““
சத்தியப்பிரமாணம் பெற்ற நீதி மன்ற மொழிபெயர்ப்பாளர் (பிரெஞ்சு -தமிழ்-ஆங்கிலம்.)

பிரான்ஸில் முதல் தமிழ் பள்ளி நிறுவனர் (1983)
நோக்கம் :மொழி, கலை,கல்வி,

தமிழர்கள் பிரெஞ்சு கற்பதற்கும்.தமிழ் பெற்றோர்களின் பிள்ளைகளுக்குத் தமிழ் மற்றும் தமிழர் கலைகளையும் கற்பித்தல்.
பாடசாலைப் பின் கல்வி(Tuition)

இயக்குநர் :பிரெஞ்சு பேராசிரியர் :Institut international des Etudes superieures -paris
பன்னாட்டு உயர்கல்வி நிறுவனம் பரிஸ்

தமிழ் நாட்டு பல்கலைக்கழகங்களின்(மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம். அண்ணாமலை பல்கலைக்கழகம். இணையக்கல்விக்கழகம். SRM பல்கலைக்கழகம் -தமிழ்ப்பேராயம்)
பல்கலைக்கழகப் பட்டப்படிப்புக்களைத் தமிழ் வழி ஐரோப்பிய நாடுகளில் 2000 ஆண்டிலிருந்து இயக்கி வருதல்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்து 57இளங்கலை -முதுகலை பட்டதாரிகளுக்குப் பட்டமளிப்பு விழா நடந்தேறியது (2015)

தமிழ் இணையக் கல்விக்கழகம் மற்றும் தமிழ்ப்பேராயம்(SRM) ஆகிய கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்.

பத்திரிகை ஆசிரியர் „ஐரோப்பா முரசு“(1992-1993)

புதிய நியமனம் :தமிழ் நாட்டு அழகப்பா பல்கலைக்கழகத்து ஆங்கிலம் மற்றும் அந்நிய மொழிகள் துறையில் பிரெஞ்சு மொழிக்கான வருகைதரு பேராசிரியராக கடந்த 29.08.2016 நாளிலிருந்து பணி…..

இப்படி பல சிறப்புக்கள் பெற்ற கல்வியாளர் பேராசிரியர் ச.சச்சிதானந்தம் அவர்களுக்கு பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் „ஈழத்தமிழ்விழி விருது வழங்கி கௌரவித்தது.

தொடர்ந்து மொழிக்கும் கல்விக்கும் கலைக்கும் பணிசெய்வதே எனது இலட்சியம் என்று இயங்கி கொண்டிருக்கிறார். பேராசிரியர் முனைவர் ச.சச்சிதானந்தம் அவர்கள்.
அவரை அவரது அலுவலகத்தில் நானும் (கே.பி.லோகதாஸ்) மூத்த நாடகவியலாளர் J.A.சேகரன் அவர்களும் சந்தித்தவேளை எடுக்கப்பட்ட ஒளிப்படம் இது. எங்கள் இருவருக்கும் நடுவில் பேராசிரியர் ச.சச்சிதானந்தம் அவர்கள் ( K.P.L) 06.09.2018