பிரான்ஸ் திருமறைக்கலாமன்றம் „வெள்ளியில் ஞாயிறு „திருப்பாடுகளின் நாடகம் 03.02.19 ஓத்திகை ஆரம்பம்!! கைப்பாஸ் வேடத்தில் 3வது தடவையாகவும் நான்!!
பிரான்ஸில் 07.04.19 அன்று மேடையேறுகிறது பிரான்ஸ் திருமறைக்கலாமன்றம் தயாரித்து வழங்கும் „வெள்ளியில் ஞாயிறு“ „திருப்பாடுகளின் நாடகம் எழுத்துருவாக்கம் நீ.மரியசேவியர் அடிகள்,யோ.ஜோண்சன் ராஜ்குமார்.நெறியாள்கை செய்கிறார் மூத்த நாடகவியலாளர் டேமியன் சூரி அவர்கள்,மேற்பார்வை நாடக மூதாளர் பெஞ்சமின் இமானுவேல் அவர்கள்.
இந்த நாடகத்தில் பாரிஸில் வாழும் 75 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்குபற்றி சிறப்பிக்கவுள்ளார்கள்.
இவ்நாடகம் „பலிக்களம் என்ற பெயரில் நீ.மரியசேவியர் அவர்களின் பிரதியாக்கத்தில் டேமீயன் சூரி அவர்களின் நெறியாள்கையில் 1992 ஆண்டில் பாரிஸில் பிரமாண்டமான Anvers அரங்கில் மேடையேறியது.இதில் 100க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்குபற்றி சிறப்பித்துள்ளார்கள். இவ்நாடகத்தில் பங்கெடுத்த கலைஞர்கள் சிலர் அமரத்துவம் அடைந்து விட்டார்கள். சிலர் தொடர்ந்து நடித்து வருகிறார்கள்.
1992 ஆண்டு பாரிஸில் மேடையேறிய „பலிக்களம்“திருப்பாடுகளின் நாடகத்தில் „கைப்பாஸ் வேடத்தில் மூத்த கலைஞர் ஏ.ரகுநாதன் அவர்கள் நடித்திருந்தார்கள்.நான் அதே நாடகத்தில் அவருடன் இணைந்து பரிசேயன் பாத்திரத்தில் நடித்திருந்தேன்.
அதற்குப்பின்னர் 2015 ஆண்டு,2017 ஆண்டு,2019 இனிவரும் மேடையேற்றத்துடன் மூன்றாவது தடவையாக அந்த வேடத்தில் மூத்த கலைஞர் ஏ.ரகுநாதன் அவர்களினதும்,
நீ.மரியசேவியர் அடிகளார் அவர்களின் ஆசிர்வாதத்துடன் நடிக்கவுள்ளது. மனநிறைவான மகிழ்ச்சி!!
07.04.19 அன்று மேடையேறவுள்ள „வெள்ளியில் ஞாயிறு „திருப்பாடுகள் நாடகம் பற்றிய பதிவுகள் இனிவரும் நாட்களில் தொடரும்