பிடித்தால் படி.!

மன மோகனா
மறந்து போவனோ?
கண்ணாலே
கதை பேசி காலாலே
கோலம் போடுவாய்.
காட்சிகளாய்
நீண்டு கடந்த
காலங்களை மீட்டுவாய்
மொழியின்றி
விழியாலே தனியாட்சி
நடத்திடுவாய்..
ஒரு நொடி
தர்க்கம்
மறு நொடி
சொர்க்கத்தின்
சாளரங்கள்
சத்தோஷ காற்றினை
இதமாய் உள்வாங்கும்.
விரல்களின்
விளிம்பில்
கவிதைகளாய்
விளைவாய்.
எட்டாதா சுரம் கூட
அந்த ஏழு ஸ்வரங்களுக்குள்
வந்து விழும்..
சங்கீத
மெட்டுக்களில்
மொட்டாகி
பாட்டாகிடுவாய்
மோகனப்
புன்னகையோடே
மெளன கீதங்களாகிடுவாய்.
ஏகாந்த
வெளிகளில்
பரவச பறத்தலில்
கை கோர்த்திடுவாய்.
காலாற நடக்கையில்
கற்பனைக்கு சலங்கை
கட்டிவிட்டாய்..
வாலிபக் கவி
வாலியை என்
வலியறியாத
வாலிப கால
நினைவில் நிறுத்தி
எதிர் புரட்சி
போடவைத்துள்ளாய்.
ரசனைக்கு
எல்லைகள் ஏது?
பிடித்தால் படி…