பாரிஸ் மாநகரில் ஞாயிறு மாலை (03 – 02 – 2019) அவுஸ்திரேலியாவிலிருந்து வருகைதந்த மூத்த எழுத்தாளர் லெ. முருகபூபதியின் „சொல்லத் தவறிய கதைகள்“ நூல் வெளியீடு சிறப்பாக நடைபெற்றது.
‚நடு‘ இணையச் சிற்றிதழின் ஏற்பாட்டில்
இடம்பெற்ற இந்நிகழ்வில் முருகபூபதி தனது ஊடகத்துறை – எழுத்துத்துறை அனுபவங்களைச் சுவைபடப் பகிர்ந்துகொண்டார்.
நிகழ்வு ஏற்பாட்டாளர் கோமகன் – வாசுதேவன் –
வி. ரி. இளங்கோவன் – மனோ – துரைசிங்கம் ஆகியோரும் உரையாற்றினர்