பாதை….கவிதை கவிஞர் தயாநிதி

புதிதல்ல
பழைய தகவலே..

திசை காட்டிகள்
நகர்வதில்லை…

போகும் பாதை
போகும் தூரம் காட்டும்.

நகர்வதும்
நடப்பதும் நம் கால்களே…

வாழ்வில் அனேக நிகழ்வுகள்
இது போன்றே அமையும்…

நதிகள் தாமாகவே
பாதையை அமைக்கும்…

செல்லும் தூரமும்
இலக்கும் மாறுவதில்லை..

கற்றதை கண்டதை
கேட்டதைக் கொண்டு நகர்..

வழிக்கு துணையாக இரு.
பழிக்கு பல்லக்கு வேண்டாமே..

உன் துணைக்கும்
துணையால் வந்த வார்ப்புக்கும்
திசைகாட்டியாகிடு…

கொண்ட இலக்கு
இலட்சிய நிறைவில்
தரிக்கட்டும்……

ஆக்கம் கவிஞர்தயாநிதி