பரிமாறல்


கடந்த கால
மீட்டல்.
உடைந்த பானையின்
உறுத்தல்..
அம்மாவின்
பார்வையில்
பாதிப் பசி
பறந்து விடும்.
கைப் பக்குவம்
மனப்பக்குவம்
பிள்ளைகளின்
விருப்புணர்ந்த பக்குவம்.
எது பிடிக்கும்
பிடிக்காதெனும்
பட்டியலுடன் நாளும்
பரிமாறல்..
சுவைகளை
தாண்டி தனித்துவமான
அறிவூட்டல்
பொறுப்பூட்டல்..
சினமறியாத
சீமாட்டியின்
சிந்தை முழுக்க
பிள்ளைகள்..
விசித்திரமானவள்
வித்தியாசமானவள்
அம்மாக்களின் அழகை
விஞ்சிட பாரில் ஏதுண்டு..
இன்று எல்லாம்
இருந்தும் அம்மா
இல்லாமை ஒன்றே
இழப்பில் கொடிதாகும்..
அம்மாவோடு
அந்த ஆனந்த
பரிமாறலும் போயாச்சு
நினைவுகள் மட்டும்
நீளமாச்சு.