பனி மெழுகிய நிலங்கள்
பனி மெழுகிய மரங்கள்
பனி உருகிய மனங்கள்
பால் போல் அழகுக் கோலங்கள்
உருகிடும் தியாகங்கள்
உள்ளுக்குள் தீயாய்
உருகிடும் பிழம்புகள்
ஊமையாய் அழுதிடும் காயங்கள்
உறை பனியாய் …..
பூச்சியத்துக்குள்ளே தான் காலநிலை
பூச்சியத்துக்குள்ளே தான் வாழும் நிலை
பூச்சியத்துக்குள்ளே தான் வாழ்க்கை முறை
பூச்சியத்திலிருந்து தான் புறநாறூறு படைத்தவன் தமிழன்.
இதற்குள்ளே தான் நாம்
புதைக்கப்பட்டோம்.
இல்லை விதைக்கப்பட்டோம்
இதற்குள்ளே தான் நாம்
வாழ்க்கைப் பட்டோம்.
புதைந்தோமென நம்பியிருந்த
பலரின் நம்பிக்கையைப் புதைத்து
விதைக்கப்பட்டோமென விருட்சமென
பல நம்பிக்கையின் அத்திவாரம் இது.
எத்தனை உறை பனிக்குள்ளும்
உறையாது பணி தொடரும் நம்பிக்கைப்
பொங்கல் தான் இந்தத் தை
உறை பனிக்குள்ளும் முற்றத்தில்
பொக்கிஷம் படைத்தான்.
பொக்கிஷம் படைத்தான்.
தீனீஸ் பறவையாய் ……
திசையுறு பந்தினைப் போல ……
விசையுறுவான் ….
நம்பிக்கையோடு …..
நகரும் நாட்களில் ….
சூரிய தேவனின் கதிரில்
உருகுது பனியும்.
இணுவையூர் சத்திதாசன்