பத்து விரல் பட்டதுமே !

பத்து மணி பத்து மணி…
பக்கம் வாடி என் முத்து மணி…
நித்திரையை ஓரங்கட்டி நிற்கிறேனே
சித்திரமே உன் நினைப்பில் சுத்துறனே

பத்து விரல் பட்டதுமே என் மேனி
பத்துதடா சூடேறி தீயாகி…
உத்தமனே என்னுடலை நீ நேசி…
செத்தவுடன் இவ்வழகில் என்ன பலன் நீ யோசி…

குற்றுயிராய் கொல்லுதடா காமனே
குற்றாளத்தில் நான் குளித்த தாமரை
முத்தத்திலே நீ நனைச்சா போதுமே
பித்தமெல்லாம் நீ தீர்த்து வைச்சா சாதனை

சற்று என்னை உற்று நீயும் பாரடி
சத்து உன்னில் ஏறும் என்னால் தானடி
சுட்டும் விழி சுந்தரி நீயடி…
முட்டி மோதி ஜெயிப்பேன் உன்னை நானடி

கவித்தென்றல்